இளம்பெண்ணின் கையை கெட்டியாக பிடித்து இழுத்த நபர் செய்த செயல்! அடுத்து நடந்த சம்பவம்!!

370

லண்டனில் சாலையில் நின்ற இளம்பெண்ணின் கையை கெட்டியாக பிடித்து இழுத்து காருக்குள் வர கட்டாயப்படுத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தெற்கு லண்டனின் Sutton High Streetல் தான் இந்த சம்பவம் கடந்த மாதம் 28ஆம் திகதி நடந்துள்ளது. அங்கு இளம்பெண்ணொருவர் நின்றிருந்த நிலையில் அவர் அருகில் 40 வயது நபர் காரில் வந்தார். பின்னர் அபெண்ணை காரில் ஏறுமாறு கட்டாயப்படுத்தினார்.

ஆனால் அவர் மறுக்கவே, அவரின் கையை கெட்டியாக பிடித்து இழுத்து காருக்குள் வரவழைத்து கடத்த அந்த நபர் முயன்றிருக்கிறார். அப்போது அந்த பெண் கூச்சலிட்ட நிலையில் அந்த பகுதியில் இருந்த சிலர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.


சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அப்பெண்ணை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் 40 வயதான ஆண் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவரிடம் இது தொடர்பில் கேள்விகள் கேட்கப்பட்டது.

சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் ஜாமீனில் கைதானவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மீண்டும் ஆகஸ்ட் மாத நடுவில் அவர் விசாரணைக்காக வரவுள்ளார்.

London police say officers shot and killed a suspect in a “terrorist-related” stabbing incident Sunday.

மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் மாலை 5.20 மணியளவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.