இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி கொடூர தாக்குதல்.. கணவர் உயிரிழந்ததும் உறவினர்கள் வெறிச்செயல்!!

11

ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரை அவரது கணவர் உயிரிழந்ததும் கணவரின் உறவினர்கள் நிர்வாணப்படுத்தி, தலைமுடியை வெட்டி கொடூரமாக தாக்கியுள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பித்து சென்ற இளம்பெண் புகார் அளித்த நிலையில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குளத்தில் மூழ்கி கணவர் உயிரிழந்த நிலையில், மனைவி தான் கணவர் உயிரிழப்பிற்கு காரணம் என்று கூறி கணவரின் உறவினர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

கும்லா மாவட்டத்தின் சதார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விருந்தா நாயக் டோலி பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், சிம்தேகா மாவட்டம், கோல் பிரா காவல் நிலையப் பகுதியில் உள்ள போதா டோலி பகுதியைச் சேர்ந்த சந்தீப் என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


அவரது மனைவி பால்கி தேவி, மாமனார் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு கோலே கொண்டு சென்றனர்.

அங்கு அவரது மாமியார், தனது மகனின் மரணத்திற்கு மருமகள் பால்கி தேவி தான் காரணம் என்று கூறி அவரை கட்டையால் அடித்து, புடவையை இழுத்து, நிர்வாணப்படுத்தி கத்தரிக்கோலால் தலைமுடியை வெட்டியுள்ளார்.

அதன் பின்னர் உறவினர்கள் ஒன்று சேர்ந்து பால்கி தேவியைத் தாக்கியுள்ளனர். அவர் மிகவும் சிரமத்துடன் தப்பித்து தனது உயிரைக் காப்பாற்றினார்.

பின்னர் தனது சொந்த கிராமத்திற்கு திரும்பியதும், அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

உயிரிழந்த சந்தீப்பிற்கும், அவரது மனைவி பால்கி தேவிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சந்தீப் தனது தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில், குடும்பத்தை நடத்த, இருவரும் கூலி வேலை செய்தனர்.

அந்த பகுதியில் வேலை கிடைக்காததால், பால்கி தேவி தனது கணவருடன் விருந்தா நாயக் டோலியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் இருவரும் குளத்துக்குச் சென்றனர். பால்கி தேவி தனது கணவர் குளத்தில் குளிக்கச் சென்ற போது துணி துவைத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது நீரில் மூழ்கி சந்தீப் உயிரிழந்துள்ளார்.