உத்தரபிரதேசத்தில் திருமணம் செய்து தருவதாக கூறி, தனியாக ஆண்களை குறிவைத்து பணம் மற்றும் நகைகளை பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பூனம் மணமகளாகவும், சஞ்சனா குப்தா அவரது தாயாகவும் நடித்து அப்பாவி இளைஞர்களை ஏமாற்றினர்.
விமலேஷ் வர்மா மற்றும் தர்மேந்திர பிரஜாபதி என்ற இரண்டு ஆண்கள் அந்த இளைஞரை அடையாளம் கண்டு பூனத்திற்கு அறிமுகப்படுத்துவார்கள். திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த கும்பல் இளைஞர்களிடம் பணம் கேட்பதாக கூறப்படுகிறது.
எளிமையான முறையில் திருமணம் நடைபெறும். அதன்பிறகு பூனம் மாப்பிள்ளை வீட்டிற்கு செல்வார். வாய்ப்பு கிடைத்தவுடன் பூனம் வீட்டில் நகை, பணம் திருடி தப்பித்து விடுவார்.
இதுபற்றி போலீசார் கூறுகையில், மற்ற இளைஞர்களை ஏமாற்றுவது போல், புகார்தாரர் சங்கர் உபாத்யாயாவையும் குறிவைத்து இந்த கும்பல் நடந்துள்ளது.
இதற்கு முன், ஆறு பேரை இவ்வாறு ஏமாற்றி உள்ளனர்.திருமணமாகாத சங்கர் உபாத்யாயா திருமணத்திற்கு பெண் தேடி வந்திருந்தார். இந்த நிலையில் தான் சங்கரை சந்தித்து திருமணம் செய்து வைப்பதாக விமலேஷ் கூறினார். ஆனால் அவர் ரூ. 1.5 லட்சம் செலவுக்கு கேட்டுள்ளார்.
இதையடுத்து விமலேஷ், ஷங்கரை அழைத்து பூனத்துக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவரிடம் ரூ. 1.5 லட்சம் கேட்டுள்ளார். ஏதோ பிரச்சனை என்று சங்கர் சந்தேகப்பட்டார்.
இதனால் பூனம் மற்றும் சஞ்சனாவின் ஆதார் அட்டைகளை கேட்டுள்ளார். அவர்கள் என்னை ஏமாற்ற முயற்சிக்கிறார்களோ என்று அவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்துள்ளார்.
அதனால், திருமணம் செய்ய மறுத்துவிட்டேன். ஆனால், என்னை கொலை செய்துவிட்டு பொய் வழக்குகளில் சிக்க வைப்பதாக மிரட்டினார்கள். யோசிக்க டைம் வேணும் என்று சொல்லி விட்டு வந்தேன்.
நாங்கள் உடனடியாக எங்கள் குழுக்களை எச்சரித்து இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரை கைது செய்தோம்’ என்றார்.