இஸ்லாமிய பெண் குடிக்கும் பானத்தில் ஊழியர் எழுதியிருந்த வார்த்தை! அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்!!

966

அமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட பானத்தில் ஐ.எஸ் என்று எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Minnesota-வின் St Paul நகரில் உள்ள Starbucks booth கடைக்கு தன் நண்பர்களுடன் 19 வயது மதிக்கத்தக்க Aishah என்ற பெண் கடந்த வாரம் சென்றுள்ளார்.

அப்போது அவர் தனக்கு ஆர்டர் செய்த குளிர்பானத்தில் இஸ்லாமிய அமைப்பின் isis என்ற வார்த்தை எழுதியிருந்தது, இதைக் கண்டு Aishah அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய Aishah, தனது பெயரை கடைக்குள் இருந்த நபர்களுக்கு இரண்டு முறை தெளிவுபடுத்தினேன். பானத்தில் எழுதப்பட்ட சொல் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் நற்பெயரை சிதைக்கும் சொல்.

அமெரிக்க-இஸ்லாமிய உறவுகள் கவுன்சில் (CAIR) பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிஷா, அந்த நேரத்தில் அவர் ஒரு ஹிஜாப் அணிந்திருப்பதாகக் கூறினார்.

இதுவே அவரை ஒரு இஸ்லாமிய பெண் என்று தெளிவாக காட்டியது. இது குறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்ட போது, பெயர் சரியாக கேட்கவில்லை என்று கூறியுள்ளனர். அதன் பின் இது தொடர்பான பிரச்சனைக்கு பின் இறுதியாக, குறித்த பெண்ணுக்கு ஒரு இலவச பானம் மற்றும் பரிசு அட்டை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


மேலும் இது குறித்து Aishah, நான் அந்த குளிர்பானத்தில் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். ஊழியரிடம் கேட்டாள், பெயர் சரியாக கேட்கவில்லை என்று கூறினார். மேலாளரும் அவருக்கு பக்கபலமாக இருந்தார். நான் இதை அவமானமாக, கோபமாக உணர்ந்தேன், என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து குறித்த நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளதுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், எங்கள் கடைக்கு வரும் அனைவருமே வரவேற்பு, மதிப்பு மற்றும் மரியாதைக்குரியதாக உணர வேண்டும், எந்தவொரு வடிவத்திலும் பாகுபாடு மற்றும் துன்புறுத்தலை நாங்கள் கண்டிப்பாக தடைசெய்கிறோம். எங்கள் கடையில் குறித்த விருந்துனரின் அனுபவத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம், நிலைமையை அறிந்து உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேட்டோம்.

நாங்கள் இந்த விஷயத்தை ஆராய்ந்தோம், இது வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல் அல்ல, ஆனால் துரதிர்ஷ்டவசமான தவறு, இது போன்று மீண்டும் நிகழாது என்பதை உறுதிப்படுத்த தெரிவித்து கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.