உடல் எடையை குறைக்கணுமா…………..
காய்கறிகளில் பெரும்பாலும் குறைந்த அளவிலான கலோரிகளும்,மிகுந்த ஊட்டச்சத்தும் உள்ளன. காய்கறிகளை நம் உணவில் அதிகமாக சேர்த்துக்கொண்டால் பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.
காய்கறிகள் உடல் எடையை குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் ,நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கும் ,உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
பல்வேறு வகையான காய்கறிகள் நம் மண்ணில் விளைகின்றன. ஒவ்வொரு காய்கறிகளும் ஒவ்வொரு சிறப்பு குணங்களை கொண்டது. குறிப்பாக இந்த தொகுப்பில் உடல் எடையை குறைக்க எந்தெந்த காய்கறிகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதை பார்ப்போம்.
பசலைக்கீரை
பசலைக்கீரையில் இரும்புச்சத்து ,நார்ச்சத்து ,பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் குறைந்த அளவிலான கலோரிகளே உள்ளன.ஆனால் ஊட்டச்சத்து மிகுதியாக உள்ளது.இந்த கீரையை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் அழகான,ஆரோக்கியமான ,கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெறலாம்.
பசலைக்கீரையை பொறியலாகவோ ,உங்கள் சாலட்டில் சேர்த்தோ அல்லது வதக்கி ஆம்லெட்டுடன் சேர்த்தும் சாப்பிட்டு வரலாம். இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதோடு நீரிழிவு நோய், இதய நோய், சில வகை புற்றுநோய் பாதிப்பில் இருந்தும் விடுபடலாம்.
ப்ரோக்கோலி
காலிஃபிளவர் , முட்டைக்கோசு மற்றும் ப்ரோக்கோலி இந்த வகையான காய்கறிகளை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் ப்ரோக்கோலி மிகுந்த ஊட்டச்சத்து கொண்ட ஒரு காய்கறியாகும்.
இதில் கால்சியம்,வைட்டமின் சி,வைட்டமின் கே மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் கலோரி குறைவாகவும்,நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.ப்ரோக்கோலி உடல் எடையை குறைப்பதில் முக்கியபங்கு வகிக்கிறது.
குடைமிளகாய்
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களின் உணவில் கட்டாயம் குடைமிளகாய் இருக்கவேண்டும். இதில் வைட்டமின் சி ,டயட் ஃபைபர் ,வைட்டமின் ஈ,பி6 போன்ற சத்துக்கள் உள்ளன.
இவ்வளவு சத்துக்கள் மிகுந்த குடைமிளகாயை நீங்கள் பல உணவு பொருட்களுடன் சேர்த்து சாப்பிடலாம். இதில் அதிக அளவிலான நீர் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது உடல் எடையை குறைப்பதோடு ,உங்களின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
தக்காளி
தக்காளி உடல் எடையை குறைக்கவும், சருமத்தை பொலிவாக வைத்திருக்கவும் ,நாட்பட்ட நோய்களில் இருந்து விடுபடவும் உதவுகிறது. ஆகவே அன்றாடம் உங்கள் உணவில் தக்காளியை சேர்த்து கொள்ளவேண்டியது மிக அவசியம்.
தக்காளியை எந்த வகையான உணவில் சேர்த்தாலும் அந்த உணவின் சுவை அதிகரிக்கும்.மேலும் ஆரோக்கியமும் கிடைக்கும்.
இனிப்பு உருளைக்கிழங்கு
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலை உணவாக இந்த ஆரோக்கியம் நிறைந்த இனிப்பு உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்ளுங்கள். இதை வறுத்து சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட்டால் இதன் சுவை அலாதியாக இருப்பதோடு, ஆரோக்கியத்தையும் பெறலாம்.
இதில் நார்ச்சத்து மற்றும் கார்ப்ஸ் நிறைந்துள்ளது.குறிப்பாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாகும். மேலும் இது சரும அழகையும் பராமரிக்க உதவுகிறது.உருளைக்கிழங்கிற்கு இது ஒரு சிறந்த மாற்று உணவாகும்.
கேரட்
குறைந்த கலோரிகளை கொண்ட காய்கறிகளில் ஒன்று கேரட். இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து என இரண்டு நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது. ஆகவே கேரட் ஆரோக்கியமான எடை இழப்பிற்கு சிறந்த ஒரு காய்கறி.
கேரட்டை ஜூஸாகவோ,பொறியலாகவோ அல்லது சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம். ஆனால் கேரட்டை பச்சையாக சாப்பிடுவது சிறந்தது.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் நீர் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.ஆகவே இதை சாப்பிட்டால் விரைவில் வயிறு நிரம்பியதை போன்ற உணர்வை நமக்கு தரும். வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் அடிக்கடி பசிக்கும் தன்மையும், அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உணர்வும் நீக்கப்படுகிறது.
இது குறைந்த கலோரிகளை கொண்டது. இதை பழச்சாறாகவோ அல்லது சாலட்டாகவோ எடுத்துக்கொள்ளுங்கள். வெள்ளரிக்காயை காலை உணவாக எடுத்துக்கொள்வது மிகவும் ஆரோக்கியமானது.
பூசணி
பூசணி குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட ஒரு காய்கறி. உடல் எடையை குறைக்க உதவும் காய்கறிகளில் இது ஒரு சிறந்த காய்கறியாகும்.
பூசணியை பொறியலாகவோ அல்லது சாலட்டாக சாப்பிடலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பூசணி பொடியை வாங்கி பழச்சாறுகளில் கலந்தும் குடித்து வரலாம். உங்களின் ஆரோக்கியமான உடல் இழப்பிற்கு உதவும் ஒரு சிறந்த காய்கறி பூசணி.