உன்ன யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்.. காத்திருந்து பழி வாங்கிய காதலன்!!

120

பீகார் மாநிலம் மோதிஹாரியில் நடந்த கொடூர சம்பவத்தில், தனது காதலியை இளைஞர் ஒருவர் வெட்டிக் கொன்றார். சன்னு ராம் பீகார் மாநிலம் மோதிஹாரியில் வசித்து வருகிறார்.

இவரும் அதை பகுதியை சேர்ந்த பூஜா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் சண்டை போட்டு பிரிந்தனர்.

இதையறிந்த பெண்ணின் வீட்டார் பூஜாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதையறிந்த, சன்னு ராம் மிகவும் கோபமடைந்தார். மேலும், பல்வேறு வகையில் மிரட்டி வந்துள்ளார்.

குறிப்பாக கல்யாணம் செய்தால் நீ என்னுடன் தான் செய்ய வேண்டும் என்றும், வேறு யாருக்கும் உன்னை கொடுக்க மாட்டேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் பூஜாவின் தாய் பயந்து மகளை பாட்டி வீட்டுக்கு அனுப்பி அவளைப் பாதுகாத்து வந்துள்ளார். இந்நிலையில் தக்க நேரத்திற்கு காத்திருந்த சன்னு நேற்று வீட்டில் பூஜா தனியாக இருப்பதை அறிந்து நண்பர்களுடன் பின்பக்கமாக வீட்டுக்குள் புகுந்துள்ளார்.

பின்னர் வீட்டில் இருந்த பூஜாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.