தமிழகத்தில்…
தமிழகத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அடித்துக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை கிண்டியை சேர்ந்தவர் நித்யானந்தன், வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும், புவனேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
புவவேஸ்வரி அடிக்கடி அவரது அக்கா கணவருடன் போனில் பேசி வந்துள்ளார். இதுபிடிக்காத நித்தியானந்தன், புவனேஸ்வரியை கண்டித்துள்ளார், இருந்தாலும் போனில் பேசுவதை தொடர்ந்துள்ளார்.
சம்பவதினத்தன்றும் போனில் பேசியுள்ளார், இதனால் இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. இதனால் கடும் கோபத்தில் இருந்த நித்தியானந்தன், கத்தியை கொண்டு சரமாரியாக குத்தியுள்ளார்.
தொடர்ந்து புவனேஸ்வரியின் சகோதரனுக்கு போன் செய்து மச்சான் உன் தங்கச்சியை கொன்று விட்டேன் என போனில் கூறியுள்ளார். இதனையடுத்து நேராக கிண்டி காவல்நிலையம் வந்து நித்தியானந்தன் சரணடைந்தார்.
புவனேஸ்வரியின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், நித்தியானந்தனும் புவனேஸ்வரியின் அண்ணனும் நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது.
நித்தியானந்தன் பெண் கேட்டு வந்ததால் தனது தங்கையை நண்பருக்கு திருமணம் செய்துவந்துள்ளதும், சந்தேகத்தால் தற்போது கொலையில் முடிந்ததும் தெரியவந்துள்ளது.