சூரிய கிரகணத்தின் போது உலக்கைகள் செங்குத்தாக நின்றதாக தர்மபுரியிலிருந்து வீடியோ ஒன்று வெளியாகியது. இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. உலக்கையின் அடிப்பகுதியானது தடையாக இருக்காது. இதனால் உலக்கையால் செங்குத்தாக நிற்க இயலாது. இந்நிலையில், சூரிய கிரகணத்தின் போது உலகை செங்குத்தாக நிற்கும்.
இதன் மூலமாக தான் கிரகணம் நிகழ்வதை கிராமத்து மக்கள் கண்டறிந்தனர். கிரகணம் முடிந்த பின்னர் இந்த உலக்கை தானாகவே கீழே விழுந்துவிடும்.
பல்வேறு கிராமங்களில் அம்மிக்கல் கூட செங்குத்தாக நிற்பது போன்ற கதைகளை நாம் கேட்டுள்ளோம். அம்மிக்கல்லாளும் செங்குத்தாக நிற்க இயலாது. ஆனால் அதுவும் கிரகண காலத்தில் செங்குத்தாக நிற்கும் தன்மை கொண்டது.
அவ்வாறு நிற்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சில கிராமங்களில் தாம்பாள தட்டில் ஆர்த்தி கரைக்கப்பட்ட பின்னர் உலக்கையை செங்குத்தாக நிற்க வைக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.