உலகளவில் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இடம்பிடித்த கோயம்புத்தூர் பெண்… யார் அவர்?

203

‘டைம்’ இதழின் உலகளவில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் கோயம்புத்தூர் பெண் இடம்பிடித்துள்ளார்.

‘டைம்’ இதழ் 2024 -ம் ஆண்டுக்கான உலகளவில் செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 8 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா (Ajay Banga), ஒலிம்பிக் வீராங்கனை சாக்‌ஷி மாலிக் (Sakshi Malik), இண்டோ – பிரிட்டிஷ் நடிகர் தேவ் படேல் (Dev Patel), பாலிவுட் நடிகை ஆலியா பட் (Alia Bhatt), Microsoft CEO சத்யா நாதெள்ளா (Satya Nadella), அமெரிக்க அரசுத் துறை ஊழியர் ஜிகர் ஷா (Jigar Shah), வானியல் துறை பேராசிரியை பிரியம்வதா நடராஜன் (Priyamvada Natarajan), இந்திய வம்சாவளி உணவக தொழிலதிபர் அஸ்மா கான் (Asma Khan) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதில் வானியல் துறை பேராசிரியையாக இருக்கும் பிரியம்வதா நடராஜன் (Priyamvada Natarajan) தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார்.

தமிழகத்தைச் சேர்ந்த கோவை மாவட்டத்தில் பிறந்தவர் பிரியம்வதா நடராஜன். இவர், தனது பள்ளி படிப்பை டெல்லியின் ஆர்.கே.புரத்தில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் முடித்தார்.

யேல் பல்கலைக்கழகத்தில் வானியல் மற்றும் இயற்பியல் பேராசிரியர் ஆக பணிபுரிந்து வரும் இவர், பல்கலைக்கழகத்தின் வானியல் துறை தலைவராகவும், பெண் பேராசிரியர் அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.


1999-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றதோடு, கருந்துளைகள் (Black holes) பற்றி ஆராய்ச்சியையும் மேற்கொண்டுள்ளார்.

இவர் எழுதிய ‘Mapping the Heavens: The Radical Scientific Ideas That Reveal the Cosmos’ என்ற புத்தகமானது 2026 -ம் ஆண்டு வெளிவந்தது. இவருக்கு 2022-ம் ஆண்டு லிபர்டி அறிவியல் மையத்தின் விருது கிடைத்துள்ளது.

வானியற்பியல் நிபுணரும், Event Horizon Telescope நிறுவன இயக்குநருமான ஷெப் டோலிமேன் (Shep Doeleman), தான் எழுதிய ‘டைம்’ கட்டுரையில் ,”பிரியாவுக்கு மிகவும் ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சியில் திறமை உண்டு.

மேலும் ஒரு சக வானியல் நிபுணராக நான் எப்போதும் அவரது பணியால் ஈர்க்கப்படுகிறேன். அவரது சமீபத்திய முடிவு நம்மை ஒரு படி எடுத்து வைக்கிறது” என்று கூறியுள்ளார்.