உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு! ஐவர் கைது..

867

உலகின் 36 ஆவதும் சீனாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவருமான Midea நிறுவன ஹீ ஸியாங்ஜியானை கடத்துவதற்கு சிலர் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்ப்படடுள்ளனர் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

77 வயதான ஹீ ஸியாங்ஜியான், உலகின் மிகப் பெரிய வீட்டுச்சாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான Midea நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவரும் ஆவார்.

சீனாவின் குவாங்டோங் மாகாணத்தின் போஷான் நகரிலுள்ள ஹீ ஸியாங்ஜியானின் வீட்டுக்குள் நேற்று ஆயுதபாணி குழுவொன்று புகுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


எனினும், அவரின் மகன் வீட்டிலிருந்து தப்பி அருகிலுள்ள ஆற்றை நீந்திக் கடந்து சென்று உதவி கோரியதாக ரி.எம்.ரி. போஸ்ட் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அதையடுத்து பொலிஸார் அங்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபர்கள் ஐவரையும் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஹீ ஸியாங்ஜியானின் சொத்து மதிப்பு 2480 கோடி அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஹீ ஸியாங்ஜியானின் மகன் ஹீ ஜியான்பெங் (55) நிறுவனத்தில் பணிப்பாளர்களில் ஒருவராக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

போர்ப்ஸ் சஞ்சிகையின் கணிப்பின்படி அவர் சீனாவின் 6 ஆவது மிகப் பெரிய செலவந்தரும் உலகின் 36 ஆவது மிகப் பெரிய செல்வந்தரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.