உல்லாசத்திற்கு வர மறுத்த மனைவி… சரமாரியாக குத்திக் கொலை செய்த கணவன்!!

139

உல்லாசத்திற்கு அழைத்த போது வர மறுத்த மனைவியைக் கொன்று அதிர செய்திருக்கிறான் கணவன் ஒருவன். சேலம் அருகே உள்ள சுக்கம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (36) கொத்தனார். இவருக்கும் அயோத்தியாப்பட்டணம் ராம்நகரை சேர்ந்த இந்துமதி (32) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்துமதியின் தாய் செல்வி செல்வி தனது மகள் இந்துமதிக்கு ராம்நகர் காளியம்மன்கோயில் தெருவில் கார் வீடு கட்டி கொடுத்துள்ளார். அந்த வீட்டில் சுரேஷ்-இந்துமதி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 11 வயதில் மகன் உள்ளார்.

கணவன், மனைவி இருவரும் கட்டிட வேலைக்கு சென்றுள்ளனர். இதில் மனைவி இந்துமதி கட்டிட வேலைக்காக தனியாக வேறு இடங்களுக்கு செல்வதாக கூறப்படுகிறது. அவர் சிலரிடம் பேசிக் கொண்டிருப்பதால் சந்தேகமடைந்த சுரேஷ் அவரிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். அவ்வப்போது குடித்து விட்டு வீட்டுக்கு வரும் சுரேஷ், மனைவி இந்துமதியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் சுரேஷ் தனது மனைவி மற்றும் மகனை விட்டுவிட்டு சுக்கும்பட்டிக்கு தனியாக சென்றார். சுரேஷ் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ராம்நகரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். வந்த நாள் முதல் மீண்டும் குடித்து விட்டு வந்து மனைவி இந்துமதியின் நடத்தையில் சந்தேகமடைந்து தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, இருவருக்கும் இடையே வழக்கம் போல் கடும் தகராறு ஏற்பட்டது. உறவினர்கள் வந்து சமரசம் செய்தனர். நேற்று காலை 6 மணியளவில் இந்துமதியிடம் சுரேஷ் மீண்டும் தகராறு செய்து தாக்கியுள்ளார். அப்போது திடீரென அவரது வயிறு மற்றும் மார்பில் கத்தியால் குத்தினார்.

இதனால், இந்துமதி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து இந்துமதியை மீட்டு ஆம்புலன்சில் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே இந்துமதி உயிரிழந்தார்.


இந்த கொலை குறித்து தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் நவாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கொலையில் தொடர்புடைய சுரேஷை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். உதவி கமிஷனர் செல்வம் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.

பின்னர் போலீசார் இந்துமதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட சுரேஸிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் கூறுகையில், “திருமணமான நாளில் இருந்து சுரேஷ் தனது மனைவியுடன் அயோத்தியாப்பட்டினம் ராம்நகரில் வசித்து வருகிறார்.

இருவரும் கட்டிட வேலைக்குச் சென்றபோது, ​​அவர் மற்ற ஆண்களிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து, அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்து, தொடர்ந்து அடித்துள்ளார். அவளை பிரிந்து 6 மாதங்கள் ஆன பிறகு, கடந்த வாரம் தான் திரும்பி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த அவர், மனைவியை தன்னுடன் உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்து தனியாக சென்று தூங்கினார். இதனால், நீ வேறொருவருடன் உறவாடுவதைப் பார்த்து நான் சும்மா இருக்க வேண்டுமா எனக் கேட்டு திட்டியுள்ளார்.

பின்னர் காலையில் எழுந்ததும் மனைவி இந்துமதியிடம் மீண்டும் தகராறு செய்து ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சுரேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த கொலை சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.