உல்லாசத்துக்கு மறுத்த காதலிக்கு காதலனால் அரங்கேறிய பயங்கரம்!!

262

இந்தூர்…

மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரவீண் சிங் (24). பிரவீண் சிங்குக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக 20 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் நெருக்கமாகி, காதலர்களாக சுற்றி திரிந்து, வந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்களது நெருக்கம் அதிகமான நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், தனது வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண், காதலன் பிரவீண் சிங்குடன் இந்தூர் மாவட்டம் ராவ்ஜி பஜார் பகுதியில் தனியே வாடகைக்கு வீடு எடுத்து, லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்துளார்.

இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 7ம் தேதி இரவு, தனது காதலியை, பிரவீன் சிங் உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால், இளம்பெண் உறவுக்கு வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன் சிங் வீட்டில் இருந்த கத்தரிகோலால் காதலியின் கழுத்தில் சரமாரியாக குத்தி உள்ளார். இதில், இளம்பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.


இதையடுத்து, வீட்டை பூட்டிவிட்டு பிரவீன் சிங் தப்பி ஓடிவிட்டார். 2 நாட்களாக வீடு பூட்டி இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது அங்கு இளம்பெண் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அப்பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் லிவ் இன் காதலியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய பிரவீன் சிங்கை கடந்த 9ம் தேதி இந்தூரில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரவீன் சிறையில் அடைக்கப்பட்டார்.