திரிபுரா மாநிலத்தில்..
திரிபுரா மாநிலம் பெலோனியா அடுத்த ஈஷன்சந்திரநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
அவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தனது அண்ணன், அன்னியுடன் அதே பகுதியில் வசித்து வந்த இளம்பெண்ணும் அந்த நபரும் நெருங்கி பழகி காதலை வளர்த்து வந்தனர்
இந்த நிலையில் இளம்பெண்ணும் அந்த நபரும் நேற்று பெண்ணின் வீட்டில் உல்லாசமாக இருக்கும் போது உள்ளூர் மக்கள் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். இதனால் இருவரும் அதிர்ச்சியில் உறைந்திருந்த அந்த நேரத்தில் உள்ளூர் மக்கள் அவர்கள் இருவரையும் ஒன்றாக மின்சாரக் கம்பத்தில் கட்டிவைத்தனர்
பின்னர், உள்ளூர் பஞ்சாயத்தார் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தியுள்ளனர். கட்டிவைக்கப்பட்டிருந்த நபரின் மனைவியும் அங்கு வரவழைக்கப்பட்டார்.
பல மணி நேரம் அவர்கள் கட்டிவைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துள்ளனர். அப்போது, இளம்பெண்ணின் முடியை பிடித்து ஒரு பெண் அடித்தார். எனினும் கள்ளக்காதல் ஜோடிக்கு உதவ அங்கிருந்த யாரும் முன்வரவில்லை.
தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து வந்த நிலையில், காயமடைந்த ஆணுடன் அந்த பெண் மின்சாரக் கம்பத்தில் ஒன்றாக கட்டிவைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அவர்களை ஊர் மக்களிடம் இருந்து மீட்டனர்.
பின்னர் பெலோனியா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக ஆணோ, பெண்ணோ, அவரது மனைவியோ எந்த புகாரும் அளிக்கவில்லை.
இதற்கு முன்பும் திரிபுராவில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. 2020 ஆம் ஆண்டில், மேற்கு திரிபுரா மாவட்டத்தில், கணவருடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, 45 வயது பெண் ஒருவரை 5 பெண்கள் சேர்ந்து மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கினர். பின்னர் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.