ஆந்திரா….
பெண்கள் இப்படியெல்லாம் செய்வார்களா என்று மொத்த ஆந்திராவும் அதிர்ந்திருக்கிறது. பணத்துக்காக இளைஞரைக் கடத்தி மிரட்டியிருக்கிறார் இளம்பெண் ஒருவர். ஆள் யார் என்று தெரியாமலேயே மீனுக்கு வலை விரித்து விட்டு காத்திருப்பதைப் போல ஃபேஸ்புக் மூலமாக உல்லாச வலை விரித்து வைத்துக் கொண்டு காத்திருந்துள்ளார் சுதாராணி.
இதில் சிக்கிய இளைஞரைக் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் ஆந்திர மாநிலத்தை அதிர செய்துள்ளது. சமீப காலங்களால் பாலியல் துன்புறுத்தல்கள், கடத்தல், கொலை சம்பவம் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் இசக்க பள்ளி கிராமத்தை சேர்ந்த இளைஞர், இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு வாழ்க்கையை இழந்துள்ளார். வெங்கடோஷூக்கும், அதே கடப்பா பகுதியைச் சேர்ந்த சுதாராணி எனும் பெண்ணுக்கும் இடையே முகநூல் மூலமாக அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளனர். இந்த அறிமுகம் நட்பாக மாறிய நிலையில் அதனை மேலும் வளர்த்து கொள்ள வெங்கடேஷ் ஆவலுடன் இருந்துள்ளார்.
வெங்கடேசின் மனநிலையை புரிந்து கொண்ட சுதாராணி வீடியோ கால் மூலம் அவரை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அப்போது வெங்கடேஷிடம் கடப்பாவுக்கு நேரில் வந்தால் உல்லாசமாக இருக்கலாம் என ஆசையை சுதாராணி தூண்டி இருக்கிறார்.
நீண்ட நாள் ஆசை நிறைவேற போகும் எண்ணத்துடன் வெங்கடேஷ் கடப்பாவுக்கு சென்றுள்ளார். ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்கு வெங்கடேசை சுதாராணி அழைத்து சென்றுள்ளார்.
அங்கு ஏற்கனவே தயாராக நின்றிருந்த சுதாராணியின் நண்பர்கள் நவீன், பிரதாப் ஆகியோர் வெங்கடேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். வெங்கடேஷின் கண்கள், கைகளை கட்டி ஒரு வீட்டிற்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.
பின்னர் வெங்கடேஷை அவருடைய குடும்பத்தினருடன் செல்போனில் வீடியோ காலில் பேச வைத்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். வெங்கடேஷ் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கடப்பா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
வெங்கடேஷ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார் வீட்டிற்குள் அடைக்கப்பட்டிருந்த அவரை மீட்டனர். மற்றொரு வீட்டில் இருந்த சுதாராணி, நவீன், பிரதாப் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.