எந்த அறிகுறியுமே இல்லாமல் திடீரென கு ழந்தையை பெற்ற பெண்.. அ திர்ச்சியடைந்த ம ருத்துவர்கள்!!

624

பிரிட்டன்……….

பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் பெண் கிளாரி வைஸ்மேன்(25). இவர் பார்ட்டி, ஆட்டம் பாட்டம் என பொழுதை கழித்து வருபவர். இந்த பெண் திடீரென ஒரு நாள் சமையல் அறையில் வீட்டு வேலை செய்துகொண்டிருந்தபோது, வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

உடனே, பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதும், 5 நிமிடத்தில் குழந்தையையும் பெற்றுள்ளார். மேலும், அந்த குழந்தை ஆரோக்கியத்துடனும், சரியான எடை அளவிலும் இருந்துள்ளது.

இந்த சம்பவத்தில் விசித்திரம் என்னவென்றால், அந்த பெண்ணிற்கு தான் கர்ப்பமாக இருப்பதே தெரியவில்லையாம். திடீரென குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.


மேலும், குழந்தை பிறந்து 12 மணிநேரங்கள் ஆகியும் அதிர்ச்சியிலேயே குழந்தையை பார்க்க தவிர்த்துள்ளார். 25 வயதுடைய இந்த பெண்ணுக்கு, அவரின் 21 வயது காதலன் உள்ளார். எந்த ஒரு அறிகுறியுமே இல்லாமல் கர்ப்பமாகி குழந்த பெற்ற சம்பவம் அவரை அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது.

இது சாத்தியமா என பல்வேறு ஆச்சர்யமான கேள்விகள் எழுந்துள்ளன. இதனை cryptic pregnancy அதாவது, ரகசிய கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது. ஹார்மோன் அல்லது வேறு ஏதேனும் உடல் பிரச்சினை காரணமாக, கர்ப்ப காலத்திலும், மாத விடாய் நிற்காமல் ஏற்படுகிறது.

அதனால், தான் கர்ப்பமாக இருப்பது பெண்களுக்கு தெரியாமல் போகிறது. மேலும், அவர்களது உடல் எடையிலோ அல்லது வடிவத்திலோ மாற்றம் ஏதும் காணப்படாததால், அவர்களுக்கு கர்ப்பம் இருப்பதை அறிய முடியாமல் போகிறது. இது மிகவும் அரிதாக நிகழும் சம்பவம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.