“என்னால அந்த பழக்கத்தை விட முடியலை” : பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

273

“என்னால அந்த பழக்கத்தை விட முடியலை” என்று சிகரெட் பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட முடியாமல் இளம்பெண் ஒருவர் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் காவேரி மாவட்டம் கர்ஜாகி கிராமத்தைச் சேர்ந்தவர் பிபிஜா சோண்டி (18). பிபிஜாவுக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்து வந்த நிலையில், பிபிஜா சிகரெட் பிடிப்பதைத் தெரிந்த அவரது பெற்றோர்,

அதிர்ச்சியுடன் பீபிஜாவை திட்டினர். அதன் பின்னரும் பிபிஜா தனது பழக்கத்தைக் கைவிட முடியாமல் தொடர்ந்து புகைபிடித்து வந்துள்ளார்.

கோபத்தில், அவரது பெற்றோர் பீபிஜாவை கடுமையாக திட்டி உள்ளனர். இந்நிலையில் பெற்றோர் கோபமாக இருந்ததால் மனமுடைந்த பிபிஜா, சம்பவத்தன்று இரவு வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைக் கண்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். இது குறித்து காவேரி புறநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீசார் பிபிஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. போலீசாரின் விசாரணையில், புகைபிடித்ததற்காக பிபிஜாவை பெற்றோர் திட்டியதால் பிபிஜா தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.