என்னை காப்பாத்தாதீங்க… கழுத்தில் பேட்ஜ் உடன் மரணத்திற்கு காத்திருக்கும் இளம் பெண்!!

203

வடமேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஜோராயா டெர் பீக். 28 வயதான அழகிய இளம்பெண், அடுத்த மாதம், மருத்துவர்கள் உதவியுடன் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்.

மன நல ஆலோசகராக வேண்டும் என்ற ஆசையிலிருந்த ஸொராயா, மன அழுத்தத்தாலும், ஆட்டிஸக் குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் தனது கல்விப் படிப்பை முடிக்க முடியவில்லை.

பத்து ஆண்டுகளாக எல்லா வித சிகிச்சை முறைகளையும் முயன்று பார்த்தும் எந்த பலனும் கிடைக்காததால் மருத்துவர்கள் உதவியுடன் தன் உயிரை மாய்த்துக்கொள்ள ஜோராயா முடிவு செய்துள்ளார்.

இதற்காகஅவர், தனது கழுத்தில் ஒரு badge ஒன்றை அணிந்துள்ளார். அதில், ‘do-not-resuscitate’ என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது, தன் உயிரைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம் என்பதாகும்.


அதாவது, தான் எங்காவது சுயநினைவில்லாமல் விழுந்துகிடப்பதை யாராவது கண்டால், உயிர் காக்கும் சிகிச்சையளித்து, தன்னை காப்பாற்ற முயற்சிக்கவேண்டாம் என்கிறார் ஸொராயா.

மரணத்தை நினைத்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது என்று கூறும் ஸொராயா, அது எப்படி இருக்கும், அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாதே, அதனால்தான் பயம் என்கிறார்.

தனது நிலைமையில் முன்னேற்றம் ஏற்படவில்லையென்றால், மருத்துவர்கள் உதவியுடன் உயிரை மாய்த்துக்கொள்வது என்பதில் தான் எப்போதுமே உறுதியாக இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

2002-ம் ஆண்டிலிருந்து, நெதர்லாந்தில், Euthanasia என்னும் மருத்துவர்கள் உதவியுடன் உயிரை மாய்த்துக்கொள்வதற்கு சட்டப்படி அனுமதி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது