ஏழு இளம் பெண்கள் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி : பீதியை ஏற்படுத்திய எட்டாவதாக தெரிந்த பெண் முகம்!!

774

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் ஏழு தோழிகள் இணைந்து செல்பி ஒன்று எடுத்துக்கொண்டார்கள். Coventry என்ற இடத்தில், ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வாழும் Rebecca Glassbrow (30) என்ற இளம்பெண், தனது ஆறு தோழிகளுடன் இணைந்து தனது கீழ் வீட்டில் வசிக்கும் தோழியின் வீட்டில் செல்பி ஒன்று எடுத்துக்கொண்டுள்ளார்.

ஆனால் அந்த புகைப்படத்தை பின்னர் பார்க்கும்போது Rebeccaவுக்கு திகில் ஏற்பட்டது. அந்த புகைப்படத்தில், எட்டாவதாக ஒரு இளம்பெண், நீண்ட கருமை நிற கூந்தலை விரித்துப் போட்டுக்கொண்டு நிற்பதைக் கண்ட Rebeccaவுக்கு உடம்பெல்லாம் புல்லரித்துப்போனது.

ஏற்கனவே அந்த குடியிருப்பிலுள்ள குளியலறைத் தொட்டி ஒன்றில் ஒருவர் இறந்துபோனதாக அரசல் புரசலாக கேள்விப்பட்டிருந்த நிலையில், இப்படி ஒரு பெண்ணின் முகத்தைப் புகைப்படத்தில் கண்டதிலிருந்து Rebeccaவுக்கு தூக்கமே வரவில்லையாம். அந்த வீட்டில் நிச்சயம் பேய் இருப்பதாக நம்புகிறார் Rebecca.


இதற்கு முன்பு அந்த வீட்டில் அவ்வப்போது ஏதாவது சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஆனால், அது அடுக்கு மாடிக் குடியிருப்பு என்பதால், அக்கம் பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் எழுப்பும் சத்தம் என்று அதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால், இப்போது உண்மையாகவே அந்த சத்தம் அக்கம் பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் எழுப்பும் சத்தம்தானா என்பதே சந்தேகமாகிவிட்டது என்கிறார் Rebecca.