ஐபோனுக்காக 8 வயது தங்கையை கொன்ற அக்கா… கையும் களவுமாக சிக்கியது எப்படி?

203

ஐபோனுக்காக 8 வயது சிறுமியை கழுத்தை நெரித்து கொன்ற 12 வயது அக்காவை பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் டென்னிசியில் கோடை விடுமுறைக்காக 2 சிறுமிகள் தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு ஐபோன் தொடர்பாக இரண்டு சிறுமிகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை தொடர்ந்து, கோபமடைந்த 12 வயது சிறுமி தனது 8 வயது தங்கை தூங்கும் போது கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.

அத்துடன் தன்னுடைய குற்றத்தை மறைப்பதற்காக தங்கையின் உடலை கட்டிலுக்கு அடியில் மறைத்தும் வைத்துள்ளார். ஆனால் அந்த அறையில் சிசிடிவி காட்சிகள் பொறுத்தப்பட்ட இருந்த நிலையில் இந்த சம்பவம் முழுவதும் அதில் பதிவாகியிருந்தது.

இந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து 12 வயது சிறுமியை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குழந்தையின் மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.