இந்திய மாநிலம் கேரளாவில் டிவி மேலே விழுந்ததில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஒன்றரை வயது குழந்தை
கொச்சின் துறைமுக நகருக்கு அருகில் உள்ள மூவாட்டுப்புழாவில் வசித்து வருபவர் அனாஸ். இவரது ஒன்றரை வயது குழந்தை அப்துல் சமத்.
நேற்றிரவு 9.30 மணியளவில் வீட்டில் இருந்த டிவி ஸ்டாண்ட் உடன் குழந்தை மேல் விழுந்துள்ளது.
உயிரிழந்த குழந்தை
இதனையடுத்து உடனடியாக படுகாயமடைந்த குழந்தை அப்துல் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. டிவி ஸ்டாண்ட்டை குழந்தை தொட்டதால் மேலே விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.