இந்தியா…..
இந்தியாவில் சந்தேகத்திற்கிடமான இளைஞர் சுற்றித் திரிந்ததால், பொலிசார் அவரை பிடித்து சோதனை நடத்தியதில் ஒரு கோடி ரூபாய் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் மாநாகராட்சிக்கான தேர்தல் வரும் 19-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இங்கிருக்கும் Park St பூங்காவில் சந்தேகத்திற்கிடமான நபர் நிறைய பணத்துடன் சுற்றி திரிவதாக நேற்று(டிசம்பர் 14-ஆம் திகதி) பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அங்கு விரைந்த சிறப்பு அதிரடிப்படையினர், அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பெயர் Maheshtala என்பதும், 27 வயது மதிக்கத்தக்க இவர், தெற்கு கொல்கத்தாவில் உள்ள பேங்க்சல் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அவர் பை முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளால் நிரப்பப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பதைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
அவரிடம் இந்த பணம் எப்படி கிடைத்தது என்பது குறித்து கேட்ட போது, அவர் எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை. இதனால் அவரை கைது செய்த பொலிசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்னும் நான்கு நாட்களில் தேர்தல் நடக்கவுள்ளதால், இது தேர்தல் காரணங்களுக்காக கொண்டு வரப்பட்டதா? ஹவாலா வழியாக பணத்தை பெற்றாரா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்