ஒரு டொலருக்காக கடத்தலுக்கு உதவிய சிறுவர்கள்… குழந்தையை மீட்க ஜனாதிபதியை தொந்தரவு செய்த தாய்: பொலிஸ் சோதனையில் வெளிவந்த பயங்கர உண்மை!

376

மெக்சிகோ……..

சிறுவன் ஒருவனுக்கும், ஒரு சிறுமிக்கும் ஆளுக்கு ஒரு டொலர் கொடுத்து அவர்கள் உதவியுடன் இளம்பெண் ஒருவர் குழந்தை ஒன்றை கடத்தினார்.

கடத்தப்பட்ட குழந்தையை மீட்பதற்காக ஜனாதிபதியையே தொந்தரவு செய்தார் குழந்தையின் தாய். சிறுமியை விசாரித்தபோது, சிக்கிய அவளது சகோதரியின் பின்னால் ஒரு பெரிய கடத்தல் கும்பலே இருந்தது தெரியவந்தது.

கடைசியாக, திரைப்படம் ஒன்றில் வருவது போல், கடத்தப்பட்ட ஒரு குழந்தை மட்டும் அல்ல, 23 குழந்தைகள் மீட்கப்பட்ட சம்பவம் மெக்சிகோவில் நடந்தேறியது. Margarita (23) என்ற இளம்பெண்ணுக்கு தன்னால் குழந்தை பெற இயலாது என்பது தெரியவந்ததையடுத்து, அவரது காதலர் அவரை விட்டுப் பிரிந்தார். ஆகவே, தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று முடிவு செய்த Margarita, குழந்தை ஒன்றைக் கடத்த முடிவு செய்தார்.


அவர் கண்களில் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்துகொண்டிருந்த Juana Pérez என்ற பெண்ணின் மகனான இரண்டு வயதுள்ள Dylan Gómez சிக்கினான். அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த ஒரு சிறுவனையும் சிறுமியையும் அணுகிய Margarita, Dylan தனது மகன் என்றும், அவன் தன்னுடன் வர அடம்பிடிப்பதாகவும் கூறி, அவனை தன்னிடம் கூட்டிக்கொண்டு வந்தால் ஆளுக்கு ஒரு டொலர் கொடுப்பதாகவும் கூற, அந்த சிறுவனும் சிறுமியும் டொலரை வாங்கிக்கொண்டு நைசாக Dylanஐ அவரிடம் அழைத்துக்கொண்டு வந்துவிட்டனர்.

குழந்தையுடன் அங்கிருந்து நழுவிவிட்டார் Margarita. மகனைக் காணாத தாய், அங்குமிங்கும் ஓடியும் அவன் கிடைக்காததால், பொலிசில் புகாரளித்துள்ளார். இந்த சம்பவம் நடந்தது ஜூன் மாதம் 30ஆம் திகதி. ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் தன் மகன் கிடைக்காததால் கடுமையான வேதனைக்குள்ளான Juana, ஜனாதிபதியின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் திடீரென நுழைந்து, தன் மகனை மீட்க கோரியதோடு, ஜனாதிபதி மாளிகை முன் போஸ்டர் ஒன்றுடன் அமைதி போராட்டத்திலும் ஈடுபட்டார்.

பொலிசாரின் தேடுதலின்போது, CCTV கமெரா ஒன்றில் Margarita சிறுவர்கள் இருவரை சந்திப்பது, Dylanஐ அந்த சிறுவனும் சிறுமியும் அழைத்துச் செல்வது முதலான காட்சிகள் சிக்கின. அந்த சிறுமியை விசாரித்தபோது, சிக்கிய அவளது சகோதரியின் பின்னால் ஒரு பெரிய கடத்தல் கும்பலே இருந்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து வீடு ஒன்றை ரெய்டு செய்த பொலிசார், அங்கு 23 குழந்தைகள் கடத்திவரப்பட்டு அடைத்துவைக்கப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர். Dylan மட்டுமின்றி, அந்த 23 குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளார்கள். Dylanஐ கடத்திய Margaritaவுக்கு 75 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம்.