கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள மகாலட்சுமி லேயவுட் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ராக்கேஷ் வைஸ்னவ். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் தனது முன்றாவது மகளை இஸ்கான் கோவிலுக்கு அருகே உள்ள தனியார் மழலையர் பள்ளியில் சேர்த்துள்ளார். அப்போது தனது மகளை பள்ளிக்கு அழைத்து விட்டு செல்வதும் பள்ளி முடிந்து வீட்டிற்கு அழைத்து செல்வதும் வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த சுழலில் அந்த பள்ளியில் வேலை செய்து வரும் ஸ்ரீதேவி ருடகி என்ற 25 வயதான ஆசிரியர் ஒருவர் அறிமுகமாகி உள்ளார். இதனை தொடர்ந்து அடிக்கடி தனது மகள் குறித்து ஆசிரியர் ஸ்ரீதேவி ருடகியிடம் கேட்டு வந்துள்ளார்.
தொடர்ந்து செல்போன் உரையாடல் நெருக்கத்தை ஏற்பட்டுத்தியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த தொழிலதிபர் ராக்கேஷ் வைஸ்னவ் மனைவி விசாரித்துள்ளார்.
இதனால் சுதாரித்துக்கொண்ட ராக்கேஷ் ஸ்ரீதேவியிடம் பேச வேறோரு செல்போனில் பேசி வந்துள்ளார். இந்த சுழலில் மழலையர் பள்ளி விரிவாக்கத்திற்கு பணம் தேவைப்படுவதாக ராக்கேஷிடம் ஸ்ரீதேவி கேட்டுள்ளார்.
அப்போது சற்றும் யோசிக்காமல் 5 லட்சத்தை ராக்கேஷ் வழங்கியுள்ளார்.தொடர்ந்து ராக்கேஷிடம் பணம்கேட்டு தொல்லை செய்துள்ளார் ஸ்ரீதேவி. இதற்கிடையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தான் வழங்கிய பணத்தை ராக்கேஷ் திரும்ப கேட்டுள்ளார். இதற்கு ஸ்ரீதேவி தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு முத்தத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் என கூறி, தனக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லையெனில், போட்டோ, வீடியோக்களை குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார். இதற்கு ராக்கேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதேவி தனது காதலர் கணேஷ் காலே மற்றும் நண்பர் சாகர் கூட்டு சேர்ந்து ராக்கேஷை கடத்த திட்டமிட்டுள்ளார்.அதன்படி, சம்பவத்தன்று தொழிலதிபர் ராக்கேஷை காரில் கடத்தி சென்றுள்ளனர்.
அப்போது இந்த விவகாரத்தை வெளியில் சொன்னால் தனிமையில் இருந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி கையில் இருந்த பணத்தை பறித்து சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராக்கேஷ் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில், ஸ்ரீதேவி ருடகி மற்றும் அவரின் ஆண் நண்பர்கள் என மூன்று பேரும் கைது செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.