இந்தியா..
இந்தியாவில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டம் பிஜாவர் என்ற பகுதியில் வசித்து வந்தவர் லக்ஷ்மண் அஹிர்வார்.
இன்று காலை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொட்டிக்குள் இறங்கியுள்ளார்.
அப்போது தொட்டிக்குள் போதிய வெளிச்சம் இல்லாமல் இருந்ததால் மின்சார லைட்டை பயன்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் திடீரென அஹிர்வாரை மின்சாரம் தாக்கியுள்ளது, இதை பார்த்த குடும்ப உறுப்பினர்கள் அஹிர்வாரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.
இதில் ஒருவர் பின் ஒருவரான மின்சாரம் தாக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர், இச்சம்பவத்திற்கு மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Madhya Pradesh | 6 people of a family died due to electrocution in the Bijawar area Chhatarpur. They were engaged in cleaning a tank: Sub Divisional Police Officer Sitaram Avasya, Bijawar
— ANI (@ANI) July 11, 2021