ஒரே நாளில் பிறந்து ஒரே நாளில் மறைந்த காதல் தம்பதி!!

125

பெங்களூருவை சேர்ந்த தம்பதி சுஜாதா-விநாயக். 51 வயதான சுஜாதா (யுகேஎஸ்எல்) என்ஜிஓ அறங்காவலராகப் பணியாற்றி வந்தார். கணவர் விநாயக் (54) தனியார் நிறுவனத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வந்தார்.

இருவரும் கல்லூரி நாட்களில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். வாழ்க்கையிலும் கைகோர்த்து பயணித்தனர். அழகான காதல் வாழ்க்கையை வாழ்ந்து வரும் இந்த தம்பதிக்கு அதிதி என்ற மகளும், இஷ்ஷான் என்ற மகனும் உள்ளனர். இந்த ஜோடி மலையேற்றத்தை மிகவும் விரும்புவார்கள்.

சில நாட்களுக்கு முன்பு, உத்தரகண்ட் மாநிலத்தில் மலையேற்றம் செய்வதற்காக தம்பதியினர் ஒன்றாக புறப்பட்டனர். மிகப்பெரிய துன்பம் அங்கு காத்திருக்கும் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

உத்தரகாண்ட் அருகே சஹஸ்த்ரா தால் மலை ஏறும் போது திடீரென கடும் பனிப்புயல் ஏற்பட்டது. இதில் ஏராளமான மலையேறுபவர்கள் சிக்கிக் கொண்டனர். இதில் இந்த ஜோடியும் சிக்கியது. ஒரே நாளில் இவ்வுலகில் உயிருடன் பிறந்த இருவரும் ஒரே நாளில் ஒரே நொடியில் இறந்தனர்.

ஆம், இருவருக்கும் ஒரே தேதிதான் பிறந்தநாள்.. இப்போது இருவருக்கும் ஒரே நாள்தான் நினைவு நாள். காலம் எவ்வளவு கொடுமையானது. ஆரம்பத்தில், இந்த ஜோடி மலையேற்ற குழுவில் இடம் பெறவில்லை.


செல்ல முடியாத இடத்திற்கு இந்த ஜோடி சென்றுள்ளது. இயற்கை சில சமயங்களில் நல்ல உள்ளங்களைத் தன் கொடூர முகத்தால் தண்டிக்கும்.

தம்பதியின் மரணம் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. “பனிப்புயலில் சிக்கிய இருவரும், வாய்ப்பு கிடைத்தால், ஒருவரை ஒருவர் காப்பாற்றியிருந்திருப்பார்கள். ஆனால், அப்படியொரு வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்திருக்காது.

தம்பதியர் இருவரும் ஒரு மித்த கருத்தை கொண்டவர்கள், தீவிர சிவபக்தர்கள். ஒன்றாக இருவரும் அடிக்கடி சிவதலங்களுக்குச் செல்வார்கள் ” என்று அவரது நண்பர்கள் கூறுகிறார்கள். உயிரிழந்த தம்பதிகள் இருவரும் ஒரே தேதியில் பிறந்து ஒரே தேதியில் இறந்ததால், தம்பதியினரின் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.