தெலுங்கானாவின் ஒரே மண்டபத்தில் ஒரு நபர் இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ள செய்தி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
லிங்காபூர் மண்டலத்தில் கும்னூர் கிராமத்தில் சூரியதேவ் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் லால் தேவி மற்றும் ஜல்காரி தேவி என்ற இருபெண்களை ஒரே நேரத்தில் காதலித்து வந்துள்ளார்.
இதையடுத்து தாங்கள் மூவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்கிறோம் என்று தெரிவித்தபோது, முதலில் கிராம பெரியவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
ஆனால் இறுதியில் அவர்கள் திருமணத்திற்கு சம்மதித்ததை தொடர்ந்து அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அதன்படி, இரண்டு பெண்களின் பெயர்களையும் ஒரே திருமண அழைப்பிதழில் அச்சிட்டு, ஒரே மண்டபத்தில், ஒரே முகூர்த்த நாளன்று அவர்களை சூர்யதேவ் பீம் திருமணம் செய்தார்.
இவர்கள் மூவரும், தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் திருமணம் செய்த வீடியோ சமூகவலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அந்த வீடியோவில், சூர்யதேவ் பீம், இரண்டு பெண்களுடன் அக்னி குண்டத்தை சுற்றி திருமணச்சடங்கில் ஈடுபடும் காட்சி இடம்பெற்றுள்ளது.