ஓட்டலில் காதலனை துப்பாக்கியால் சுட்ட மாடல் அழகி : அதிர்ச்சிக் காரணம்!!

395

பிரேசிலில்..

பிரேசிலில் மாடல் அழகி தனது காதலனை துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓட்டலில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பிரேசிலைச் சேர்ந்த மாடல் அழகி மார்செல்லா எலன் பைவா மார்டின்ஸ். இவர் தனது 40 வயது காதலரான ஜோர்டான் லோம்பார்டியுடன் பிரேசிலியாவில் உள்ள பார்க்வே ஓட்டலில் தங்கி இருந்தார்.

அழகி மார்செல்லா போதையில் இருந்த நிலையில் அதிகாலையில், அவர்களுக்குள் சண்டை ஏறபட்டு உள்ளது.


அப்போது லோம்பார்டியிடம் இருந்து கைத்துப்பாக்கியைப் பறித்த மார்செல்லா அவரை சுட்டு உள்ளார். இதில் படுகாயம் அடைந்த காதலர் லோம்பார்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே மாடல் அழகி ஓட்டலின் வாயிலில் இருந்த டிரைவரை தாக்கிவிட்டு லோம்பார்டியின் காரில் தப்பி சென்று உள்ளார்.

இதுத்தொடர்பாக அந்நாட்டு போலிசார விசாரித்து வருகின்றனர். மாடல் அழகியும் லோம்பார்டியாவும் ஜனவரி 2023 இல் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது.