கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க தாய் போட்ட மாஸ்டர் பிளான் : மகளே மாட்டிவிட்ட சுவாரஸ்ய சம்பவம்!!

334

தாய்லாந்தில்…

தாய்லாந்தில் தனது தோழிக்கு தரவேண்டிய கடனை திருப்பி கொடுக்காமல் தப்பிக்க பெண் ஒருவர் தான் இறந்துவிட்டதாக அறிவித்து நாடகமாடியது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

L என்று அறியப்படும் அப்பெண் தன்னுடன் வேலை பார்த்த மாயா (Maya Gunawan) என்ற பெண்ணிடமிருந்து ஒரு தொகை கடனாக வாங்கியுள்ளார்.

அந்த பணத்தை அவர் நவம்பர் 20-ஆம் திகதி திருப்பி தருவதாக கூறியிருந்தார். ஆனால், சொன்னபடி கொடுக்கமுடியாததால், டிசம்பர் 6-ஆம் திகதி நிச்சயம் தருவதாக அவகாசம் கேட்டிருந்தார்.


இந்த நிலையில், மாயா எதேச்சையாக பேஸ்புக்கை திறந்து பார்த்தபோது, எல் ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டதாக அவரது மகள் புகைப்படண்களுடன் பதிவிட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

எல் தனது வீட்டிற்கு அருகில் ஒரு விபத்தில் தனது உயிரை இழந்ததாகவும், 370 மைல் தொலைவில் உள்ள பண்டா ஆச்சே நகரில் அடக்கம் செய்யப்படுவார் என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளைத் துணியில் சுற்றப்பட்ட அவரது பிணத்தின் படத்துடன் இந்த பதிவு பகிரப்பட்டது. அதில் அவர் கண்மூடிய நிலையில், மூக்கின் துவாரங்கள் பஞ்சினால் அடைக்கப்பட்டிருந்தது. மற்றொரு புகைப்படம் மருத்துவமனையின் உள்ளே அவர் ஸ்ட்ரெச்சரில் கிடப்பது போல் இருந்தது.

ஆனால், தனது தாயார் தனது பேஸ்புக் கணக்கை ஹேக் செய்து அந்த பதிவை ஷேர் செய்ததாக, எல்-ன் மகள் கூறியதும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில், எல் தனது பணத்தை திருப்பிச் செலுத்துவதற்காக காத்திருப்பதாகவும், காவல்துறைக்கு செல்லவில்லை என்றும் உள்ளூர் ஊடகங்களில் பேசிய குணவன் கூறினார். ஆனால், எல் இன்னும் தான் கண்டுபிடிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

கடனை திருப்பி கொடுக்காமல் தப்பிக்க பெண் ஒருவர் தான் இறந்துவிட்டதாக அறிவித்து நாடகமாடிய சம்பவம் வேடிக்கையாக மாறியது.