கட்டுமானப்பணியின் போது தவறி விழுந்த பெண்… உடலுக்குள் நுழைந்த 80 சென்றிமீற்றர் நீள கம்பி: ஸ்கேனில் தெரிந்த திகில் காட்சி!

412

சீனா…………..

சீனாவில் கட்டுமானப்பணியின்போது 10 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த ஒரு பெண்ணின் உடலுக்குள் கம்பி ஒன்று நுழைந்தது.

கம்பியில் சிக்கி தொங்கிக்கொண்டிருந்த Xiang என்ற அந்த பெண்ணை, கம்பியை அறுத்து மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்கள் உடன் வேலை செய்தவர்கள்.

அந்த கம்பி Xiangஇன் பிட்டம் வழியாக நுழைந்து, அவரது தோள் வழியாக வெளியே நீட்டிக்கொண்டிருந்தது.

அவரை ஸ்கேன் செய்த மருத்துவர்கள், அந்த கம்பி உடலின் முழு நீளத்தையும் ஆக்கிரமித்திருந்தாலும்,


அவரது முக்கிய உள்ளுறுப்புகளோ, முக்கிய இரத்தக்குழாய்களோ பாதிக்கப்படாமலிருப்பதைக் கண்டு வியந்தார்கள்.

உடனே அறுவை சிகிச்சை ஒன்றை துவக்கிய மருத்துவர்கள் அந்த கம்பியை அகற்றுவதற்கு மூன்று மணி நேரம் போராடவேண்டியிருந்தது.

வெற்றிகரமாக மருத்துவர்கள் அந்த கம்பியை அகற்றிய நிலையில், தற்போது Xiangஇன் நிலைமை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அவ்வளவு நீளக் கம்பி உடலுக்குள் நுழைந்தும்,

அந்த பெண் உயிர் பிழைத்தது உண்மையாகவே அற்புதம்தான்!