உத்தரப்பிரதேசத்தில் கணவனை கட்டி வைத்து மர்ம உறுப்பில் சிகரெட்டால் சூடுபோட்ட மனைவி கைதுசெய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம், சியோஹரா மாவட்டத்தில் உள்ள பிஜ்னோர் என்ற இடத்தை சேர்ந்தவர் மெகர் ஜஹன். இப்பெண்ணுக்கும் மனன் சைதி என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமானவுடன் மெகர் தனது கணவனை தனிக்குடித்தனம் செல்லவேண்டும் என கட்டாயப்படுத்தி தனிக்குடித்தனம் சென்றார். தனிக்குடித்தனம் சென்ற நாளில் இருந்து மெகர் தினமும் தனது கணவரை அடித்து சித்ரவதை செய்தார்.
அதோடு மெகர் தனது கணவரின் கை மற்றும் கால்களை கட்டிவிட்டு சிகரெட்டால் உடம்பு முழுக்க சூடுபோட்டார். மேலும் மெகர் தனது கணவர் நெஞ்சில் ஏறி அமர்ந்து கொண்டு, அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார்.
இந்நிகழ்வு கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. அந்த வீடியோ சோசியல் மீடியாவில் பரவி இருக்கிறது. வீடியோ பதிவுடன் சென்று மனன், தன் மனைவி மீது போலீஸில் புகார் செய்துள்ளார். அவர் தனது புகாரில் கை, கால்களை கட்டிவிட்டு உடம்பு மற்றும் மர்ம உறுப்பில் சூடு வைத்து சித்ரவதை செய்ததாகவும்,
சில நேரங்களில் போதைப்பொருளை கொடுத்து விட்டு சித்ரவதை செய்ததாகவும் தனது மனைவி மீது புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, மெகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.