மனைவியைக் காண்பதற்காக பிரித்தானியாவிலிருந்து ஆசையுடன் ஓடோடி வந்த கணவரை காதலன் உதவியுடன் துண்டு துண்டாக வெட்டி ஒரு ட்ரம்முக்குள் போட்டு சிமெண்ட் கலவையால் மூடிய பெண்ணை யாரும் எளிதில் மறந்திருக்கமுடியாது.
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சௌரப் ராஜ்புத் (Saurabh Rajput, 29), பிரித்தானியாவில் கடற்படையில் சரக்குக் கப்பல்களைக் கையாளும் பணியிலிருந்துள்ளார்.
தனது மகளின் பிறந்தநாளன்று, தன் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக, பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி லண்டனிலிருந்து இந்தியா வந்த ராஜ்புத், மார்ச் மாதம் 4ஆம் திகதி திடீரென மாயமானார்.
இந்நிலையில், ராஜ்புத்தின் மனைவியான முஸ்கன் ரஸ்தோகியும், அவரது காதலரான சாஹில் ஷுக்லாவுமாக சேர்ந்து ராஜ்புத்தைக் கொன்று, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, ஒரு ட்ரம்மில் போட்டு, அதை சிமெண்டால் மூடிவிட்டது விசாரணையில் தெரியவந்தது.
சிறையில் பரிசோதனையில் தெரியவந்த விடயம்
முஸ்கனும் சாஹிலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், முஸ்கன் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
மருத்துவப் பரிசோதனையில் முஸ்கன் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரியான Dr அஷோக் கட்டாரியா தெரிவித்துள்ளார்.