கணவன் வெளிநாட்டில்…. தாய் 7 வயது மகனுடன் எடுத்த விபரீத முடிவு : சோகத்தில் மூழ்கிய கிராமம்!!

365

ராமநாதபுரம்….

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டணம் முத்துப்பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் செல்வரா வனிதா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் இருந்து வரும் நிலையில் செல்வராஜ் வெளிநாட்டில் கூலி வேலை செய்து வருகிறார்.

வனிதாவின் கணவர் செல்வராஜ்க்கு சேர வேண்டிய சொத்துக்களை உறவினர்கள் கிடைக்க விடாமல் செய்ததாக தெரிகிறது.இதனால் அடிக்கடி தகராறு வாக்குவாதங்களும், பலமுறை பிரச்சனைகளும் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் வனிதாவின் கணவர் கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்துவிட்டு 2 நாட்களுக்கு முன்பு தான் மீண்டும் வெளிநாட்டுக்கு சென்றிருந்தார். கணவர் வந்து பேசியும் சொத்து கிடைக்காத விரக்தியில் இருந்த வனிதா நேற்று நள்ளிரவு தன்னுடைய இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்கு பின்புறம் உள்ள குளத்திற்கு சென்று தற்கொலை செய்ய முயற்சித்தார். மூத்த மகன் விகாஸ் தப்பித்து சென்ற நிலையில், 3ம் வகுப்பு படிக்கும் 7 வயது மகன் லிகாஷுடன் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.


இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் விரைந்து வந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

குடும்ப சொத்து பிரச்சனை காரணமாக தன்னுடைய பெற்ற மகனுடன் சேர்ந்து குளத்தில் விழுந்து தாய் மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.