ரஷ்யாவில்..
கணவரை மதிக்காமல் திரியும் பெண்களுக்கு மத்தியில் கணவர் ஒரு வார்த்தை சொன்னதற்காக உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக மாற்றிக் கொண்ட அதிசய பெண்களும் உள்ளனர் அதுவும் இந்தியாவில் இல்லை . ரஷ்யாவில் என்றால் பலருக்கும் ஆச்சரியம் தான்.
ரஷ்யாவின் மிகப்பெரிய நகரமான பெல்கிரேடில் வசித்து வருபவர் இளம் பெண் யானா பாப்ரோவா. இவர் கொழு கொழுவென பூசிய உடல் தோற்றம் பெண்ணாக உயரத்துக்கேற்ற பருமனுடன் தான் இருந்து வந்தார்.கல்லூரி காலத்தில் இருந்தே உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணமும், ஆசையும் இந்த பெண்ணுக்கு உண்டு.
இவருக்கு திருமணமான நிலையில், பெண்ணின் கணவரும் யானாவின் தோற்றம் குறித்து கூறிய கமெண்ட் அடித்துள்ளார். உனது கன்னம் கொழு கொழுவென பருமனாக உள்ளது எனக் கூறி அடிக்கடி கிண்டல் செய்துள்ளார். இதை கேட்டதும் தனது உடல் எடையை குறைத்தே தீர வேண்டும் என முடிவெடுத்த யானா, யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத டயட்டில் இருந்து வந்தார்.
இதற்காக அவர், வெறும் பிஸ்கட், டீ, சாக்லேட் போன்றவற்றை மட்டுமே சாப்பிட்டு தீவிர உடற்பயிற்சி செய்த யானா, படிப்படியாக உடல் எடையை குறைத்து தற்போது எலும்பும் தோலுமாக இருக்கும் தோற்றத்திற்கு மாறியுள்ளார்.
5.2 அடி உயரம் கொண்ட யானாவின் உடல் எடை என்னவென்று கேட்டபவருக்கு ஒரு கனம் மயக்கமே வந்துவிடும். ஆம், தற்போது யானாவின் உடல் எடை வெறும் 22 கிலோ தான். இவர் இப்படி மோசமாக உடல் எடையை குறைத்ததால் வேலை பறிபோனது. கணவரும் யானாவை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
இந்த விஷயம் எல்லாம், ரஷ்யாவின் NTV நடத்தும் டிவி ஷோவில் பங்கேற்று யானா பேட்டி அளித்து உலகிற்கு பகிர்ந்து கொண்டார். யானாவின் பேட்டியை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷோ ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்டுடியோவில் இருந்து நேரடியாக மருத்துவமனையில் கொண்டு சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவருக்கு மனநல சிகிச்சையும் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.