கணவருடன் 28 நாட்கள் வாழ்ந்த பெண்..1500 ரூபாய் பணம் கொடுத்த உறவினர்கள்.. நடந்தது என்ன?

202

பழனி லட்சுமிபுரத்தில் வசித்து வருபவர் நஸ்ரின் பாத்திமா( 31). இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த காதர் ரியாஸ் என்ற இளைஞருடன் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணம் முடிந்து ஒரு மாதத்தில் கணவர் காதர் ரியாஸ்ன் அம்மா மற்றும் அக்கா ஆகியோருடன் நஸ்ரின் பாத்திமாவை பழனியில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்து விட்டு சென்றுள்ளார்.

சில நாட்கள் கழித்து நஸ்ரின் பாத்திமாவின் பெற்றோர் கணவர் வீட்டிற்கு சென்ற போது மேலும் 20 பவுன் நகை கொண்டு வந்தால் மட்டுமே காதர் ரியாசுடன் வாழ முடியும் எனக்கூறி திருப்பி அனுப்பி உள்ளனர்.

நஸ்ரின் பாத்திமாவின் பெற்றோர் ஏற்கனவே கடன் வாங்கி 32 சவரன் நகை போட்டு திருமணம் செய்து கொடுத்த நிலையில் மேலும் 20 சவரன் நகை கேட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடித்து மணமகனின் வீட்டிற்குச் சென்று பலமுறை பேசியும் அவர்கள் ஒத்துக் கொள்ளாததால் பழனி மகளிர் காவல் நிலையத்தில் நஸ்ரின் பாத்திமா வரதட்சணை கொடும

தொடர்பாக புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு நஸ்ரின் பாத்திமாவிற்கு அவரது கணவர் முத்தலாக் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் தன்னுடன் 28 நாட்கள் வாழ்ந்ததற்கு 1500 ரூபாய் பணம் தருவதாக வரையோலை எடுத்து அனுப்பியுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நஸ்ரின் பாத்திமா மற்றும் குடும்பத்தினர் பழனி நகர காவல் நிலையம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். போலீசார் புகாரை வாங்க மறுத்ததுடன்.


முத்தலாக் தடை செய்யப்பட்டு விட்டது ஆனால் தமிழகத்தில் எந்த காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனக் கூறி அனுப்பி வைத்துள்ளனர். முத்தலாக் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தனது பெற்றோர் கொடுத்த நகையை பறித்து ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தான் வாழ்ந்ததற்காக 1500 ரூபாய் பணத்தை கொடுத்து அவமானப்படுத்திய நபர் மீது மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.