கணவர் தற்கொலை செய்ததாக கூறிய மனைவி… வீட்டிற்கு சென்ற பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

912

சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தரணிதரன். இவர் வாடகை கார் ஓட்டி வந்துள்ளார். பவானி என்ற பெண்ணுடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், தரணிதரன் கடந்த 22 ஆம் தேதி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தரணிதரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசார் நினைத்துள்ளனர்.

தரணிதரன் உடல் பிரேத பரிசோதனை நடந்து முடிந்த நிலையில், கழுத்து இறுக்கப்பட்டு இறந்தது தெரிய வந்தது. இதன் காரணமாக, தரணிதரன் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரது மனைவி, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். தொடர்ந்து, தரணிதரன் மனைவியின் செல்போனை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, ஒரு நபருடன் பவானி அதிகம் பேசி வந்ததாக தெரிகிறது. அந்த நபர், தரணிதரன் இறப்பதற்கு முன் வீட்டிற்கு வந்து சென்றதும் தெரிய வந்தது. பின்னர், நடத்திய விசாரணையில், அவர் தனது கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவரை கொலை செய்ததாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.

முன்னதாக, தரணிதரனின் நண்பரான பூந்தமல்லி திருமால் நகரை சேர்ந்த தினேஷ் என்பவர் டிரைவராக உள்ளார். இருவரும் வழக்கமாக ஒன்றாக அமர்ந்து மது அருந்தி வந்துள்ளனர். இதனால் அடிக்கடி தரணிதரன் வீட்டிற்கு தினேஷ் வந்து செல்லும் நிலையில், அப்போது அவருக்கும் பவானிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. தங்களின் கள்ளக்காதலுக்கு தரணிதரன் இடையூறாக இருப்பதால் அவரை தீர்த்துக்கட்ட இருவரும் முடிவு செய்துள்ளனர்.


இதனால் கடந்த 21 ஆம் தேதி பூச்சி மருந்துக் கடையில் இருந்து பூச்சி மருந்தை வாங்கி வந்து உணவில் கலந்து கொடுத்து விடும்படி பாவனியிடம் தினேஷ் தெரிவித்துள்ளார். அன்றிரவே, மதுபோதையில் வந்த தரணிதரனுக்கு உணவில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்டு விட்டு தூங்கிய தரணிதரன் மறுநாள் காலையில் எழுந்து வாந்தி மட்டும் எடுத்துள்ளார். பூச்சி மருந்து உண்டும் கணவன் சாகாத தகவலை தினேஷிடம் பவானி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த தினேஷ், தூங்கிக் கொண்டிருந்த தரணிதரனை திருப்பி துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்துள்ளனர். இருவரின் கண் முன்னால் தரணிதரன் துடிதுடித்து இறந்து போயுள்ளார். தொடர்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக இருவரும் நாடகமாடியது தெரிய வந்தது.

இன்னொரு அதிர்ச்சி தகவலாக பவானிக்கு அப்பகுதியை சேர்ந்த மேலும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை கொலை செய்து விட்டு மனைவியை நாடகமாடிய செயல் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.