கண்களை கட்டி உயிருடன் புதைக்கப்பட்ட இந்திய மாணவி : காதலன் செய்த பகீர் சம்பவம்!!

526

ஆஸ்திரேலியாவில்……

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவி ஜாஸ்மீன் கவுர்(21). இவர் நர்சிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில், 2021ம் ஆண்டு மார்ச் மாதம் ஜாஸ்மீன் கவுரின் முன்னாள் காதலன் தாரிக்ஜோத் சிங்கால் கடத்தப்பட்டு சுமார் 650 கி.மீ. காரில் கடத்தி செல்லப்பட்டு தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தின் ஃபிளிண்டர்ஸ் ரேஞ்சஸ் மலை பகுதியில் அழைத்து சென்று உயிருடன் புதைத்துள்ளார். இந்த கொடூர கொலை தொடர்பான அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு தாரிக்ஜோத் சிங்கும், ஜாஸ்மீன் கவுரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஜாஸ்மீன் கவுர் காதலுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

அப்படி இருந்த போதிலும் காதலன் பேசும் படி ஜாஸ்மீனை தொந்தரவு செய்துள்ளார். ஆனாலும், ஜாஸ்மீன் அவருடன் பேச மறுத்துவிட்டார்.


இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், ஜாஸ்மீனை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, அடிலெய்டில் பயிற்சி செவிலியராக பணியாற்றி வந்த அவரை காரில் கடத்தி சுமார் 650 கி.மீ. தூரத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து ஃபிளிண்டர்ஸ் மலைப்பகுதிக்கு அழைத்து சென்று கழுத்தை அறுத்து கண்களை கட்டி அப்படியே கல்லறையில் உயிருடன் புதைத்துள்ளார்.

விசாரணையின் போது தாரிக்ஜோத் சிங் குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தாலும், கொலை குறித்த கொடூரமான விவரங்கள் உச்ச நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணையில் வெளி வந்துள்ளது. தாரிக்ஜோத் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.