கண்கள், கை, கால்களை கட்டி சித்ரவதை செய்து இளைஞர் படுகொலை!!

101

திண்டுக்கல் தோமையார்புரம் மேடு பகுதியில் கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அங்கு கொடூரமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்த இளைஞரின் உடலை கைப்பற்றி முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும், கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட இளைஞர் யார் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்த விவரங்களை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும், உடல் கிடந்த இடத்தில் மோப்ப நாய்கள் கொண்டும், தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.கொலை செய்யப்பட்ட நபரின் கை, கால்கள், வாய் கட்டப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

அந்த இடத்தில் கொலை நடந்ததற்கான தடயங்கள் இல்லாத நிலையில் வேறு எங்காவது கொலை செய்யப்பட்டு அந்த உடல் இங்கு போடப்பட்டும் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.


உடல் இருந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களிடம் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இவர் திண்டுக்கல் சின்னாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகன் மகன் பாலமுருகன் என்பதும், அவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாக தெரியவந்துள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பிலிருந்து பாலமுருகன் காணவில்லை என ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது அவரை கடத்தி கொடூரமாக சித்திரவதை செய்து, கொலை செய்து உடலை போட்டிருக்கலாம் என கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக கொலை சம்பவங்கள் நடக்காமல் இருந்த நிலையில், மீண்டும் கொலை சம்பவம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லில் மட்டும் கடந்த 6 நாட்களில் 4 படுகொலைகள் நிறைவேறிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு ரவுடிகள் கை செய்யப்பட்டு குற்ற சம்பவங்கள் குறைந்திருந்த நிலையில், அதற்கு சேர்த்து வைத்தாற் போல், கொடூர கொலை அரங்கேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.