கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா.. டூபீஸ் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த திஷா பதானி!!

186

திஷா பதானி..

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட டூபீஸ் உடை அணிந்த புகைப்படங்களை பதிவிட்டு வரும் திஷா பதானிக்கு 6 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்களாக உள்ளனர்.

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், பாலாவுடன் இணைந்து வணங்கான் படத்தில் நடித்து வந்தார். ஆனால் அந்த படத்திலிருந்து பாதியிலே சூர்யா வெளியேறிவிட்டார்.  சிறுத்தை சிவா இயக்கத்தில் எப்படியாவது மிகப்பெரிய வெற்றியை கொடுத்தாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் பிரம்மாண்டமாக கங்குவா படத்தை உருவாக்கி வருகிறார்.

சமீபத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பின் போது கேமரா சூர்யாவின் தோள்பட்டையில் இருந்து விபத்து ஏற்பட்ட நிலையில் அவருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. சென்னையில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில் கங்குவா திரைப்படம் உருவாக்கி வரும் நிலையில்,  அந்த படத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகை திஷா படானி தனது போர்ஷன் இல்லாத நிலையில், நாகினி நடிகை மௌனி ராயுடன் சுற்றுலா கிளம்பியுள்ளார்.


புத்தாண்டை முன்னிட்டு ஹாலிடே கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ள திசா பதானி மற்றும் மௌனி ராய் தீவு ஒன்றில் டூபீஸ் உடையுடன் கொடுத்த கிக்கேற்றும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கங்குவா படத்திலும் ரசிகர்களுக்கு அதிகப்படியான கிளாமர் விருந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுத்தை சிவா கொஞ்சம் பார்த்து செய்யுங்க என சூர்யா ரசிகர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.