கதறியழும் கர்நாடகம்.. 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் உயிரிழந்த மாணவி நேஹா!!

330

கர்நாடகா முழுவதுமே கல்லூரி மாணவி நேஹாவின் மரணம் குறித்து கதறுகிறது. ஏதுமறியா அப்பாவி மாணவியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், 58 வினாடிகளில் மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது பொதுமக்களின் சோகத்தை மேலும் அதிகமாக்கி இருக்கிறது.

பாவம் அந்த பொண்ணு என்ன மாதிரி துடிச்சிருப்பா? என்று அரற்றுகிறார்கள். கல்லூரி வளாகத்திலேயே 14 முறை கத்தியால் குத்தப்பட்டு பலியாகி இருக்கிறார் நேஹா.

அங்கிருந்தவர்கள் உடனடியாக நேஹாவை மீட்டு, ஹூபள்ளி கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவருக்கு இதயத் துடிப்பு இல்லை என்று மருத்துவர்கள் கைவிரித்துள்ளனர். அதிகளவிலான கத்திக் குத்து நேஹாவின் கழுத்திலும், நெஞ்சுப் பகுதியிலும் பதிந்துள்ளது.

கழுத்தில் 5 செமீ ஆழத்துக்கு பாய்ந்த பலமான கத்திக்குத்து, மூச்சுக்குழாய் மற்றும் ரத்த நாளங்களை அறுத்துள்ளதில், அடுத்த 58 வினாடிகளில் மரணம் ஏற்பட்டுள்ளது என்று உடற்கூராய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தன்று, நேஹாவுடன் கல்லூரியில் படித்த ஃபயாஸ், தேர்வு அறையிலிருந்து நேஹா வெளியே வந்ததும், கத்தியால் கண்மூடித்தனமாக குத்தி கொலை செய்திருக்கிறார். போலீசாரின் விசாரணையில், தான் நேஹாவிடம் பேச வந்ததாகவும், அவர் மறுத்ததால் ஆத்திரத்தில் குத்தியதாகவும் கூறியிருக்கிறார்.