கனடாவில் இரத்தக் களரியுடன் பயங்கரமான ஆயுதங்களுடன் கடும் கோபத்தில் வந்த இளைஞர்கள்! குலை நடுங்க வைத்த சம்பவம்!!

428

கனடாவில் கடற்கரை ஒன்றில் இரண்டு ஆண்கள் இரத்தக் களரியுடன் பயங்கரமான ஆயுதங்களுடன் அங்கிருந்தவர்களை மிரட்டும் தோணியில் வந்த வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது.

கனடாவின் , Toronto-வில் இருக்கும் Cherry கடற்கரையில் இரண்டு இளைஞர்கள் இரத்தக் களறியுடன் பயங்கரமான ஆயுதமான chainsaws-வுடன் அங்கிருக்கும் மக்களை அச்சுறுத்தி வகையில், அதை அழுத்திக் கொண்டே வந்தனர்.

அப்போது அவர்கள் அங்கிருந்தவர்களிடம் தாக்கியது நீ தானா? என்று ஒரு வித ஆக்ரோசத்துடன் கேட்டனர். இருவரின் உடலில் இரத்தக் காயங்கள், கையில் ஆயுதமான chainsaws-வுடன் இருந்ததால் அங்கிருந்த சிலர் இவர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்து அங்கிருந்து ஓடினர். இந்த சம்பவத்தை அங்கிருக்கும் நபர் வீடியோவாக எடுத்துள்ளார்.


குறித்த இரண்டு இளைஞர்கள் சம்பவத்திற்கு முன்னர், வாக்குவாதத்தின் சிலருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக காயமடைந்துள்ளனர். அதன் பின் ஆயுதங்களை எடுத்து வந்து மிரட்டியுள்ளனர்.

இருவரும் கைது செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களிடம் இருக்கும் ஆயுதங்களை பொலிசார் கைப்பற்றியுள்ளதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

நடைபெற்று வரும் விசாரணையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டி பொலிசார் அந்த இளைஞர்களின் பெயர்கள் மற்றும் என்ன குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறித்தும் தெரிவிக்கவில்லை.
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு நடந்துள்ளது. யாருக்கும் இந்த சம்பவம் காரணமாக காயம் ஏற்படவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.