கனடாவில் ஓடும் பேருந்தில் பெண் அருகில் வந்த நபர் செய்த மோசமான செயல்! சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்ட பொலிசார்!!

436

கனடாவில் ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்ட நபரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டு அது தொடர்பில் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.

லண்டன் நகரில் தான் இந்த சம்பவம் கடந்த மாதம் 31ஆம் திகதி நடந்துள்ளது. அதன்படி லண்டன் டிரான்ஸிட் கமிஷன் பேருந்தில் இரவு 9 மணியளவில் பெண்ணொருவர் பயணம் செய்துள்ளார்.

அப்போது அவர் அருகில் வந்து உட்கார்ந்த ஆண் பயணி அவரிடம் தவறாக நடந்து கொண்டார்.

பின்னர் ஹாமில்டன் சாலை வந்த போது பேருந்தில் இருந்து ஆண் பயணி கீழே இறங்கி சென்றுள்ளார். இந்த நிலையில் அவரின் சிசிடிவி புகைப்படத்தை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.


அந்த அறிக்கையில், பெண் பயணி அருகில் வந்து உட்கார்ந்த நபர் தவறாக நடந்துவிட்டு கீழே இறங்கி சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தில் குறித்த பெண்ணுக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.

அவரிடம் தவறாக நடந்து கொண்ட ஆண் பயணியின் வயது 18ல் இருந்து 25க்குள் இருக்கும், அவரை யாராவது பார்த்தாலோ அல்லது தகவல் தெரிந்தாலோ எங்களிடம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.