கனடாவில் சிறுவனிடம் கவர்ந்து பேசி பள்ளி ஆசிரியர் செய்த மோசமான செயல்! புகைப்படத்துடன் வெளியான பின்னணி!!

815

கனடாவில் சிறுவனை சமூகவலைதளம் மூலம் பேசி நேரில் வரவழைத்து தவறாக நடந்து கொண்ட பள்ளி ஆசிரியரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

ரொரன்ரோவை சேர்ந்த Taher Saifuddin (43) என்பவர் தான் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Taher பள்ளிக்கூட ஆசிரியராக பணியாற்றியவர் ஆவார். சம்பவத்தின் போது அவர் ஆசிரியர் பணியில் இருந்தாரா என்ற விபரம் தெரியவில்லை.

அதன்படி Taher கடந்த மாதம் 7ஆம் திகதி சமூகவலைதளம் மூலம் பழகிய சிறுவனை சந்தித்து அவனிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.


இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் Taher-ஐ கடந்த 28ஆம் திகதி கைது செய்தனர்.

தற்போது அவர் மீது சிறார்களை கவர்ந்திழுத்தல், வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

Taher மூலம் மேலும் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதும் பொலிசார் அது தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.