கனடாவில் தனது இரண்டு குழந்தைகள் கத்தியால் குத்திய தாயார் கைது! வெளிவந்த பின்னணி தகவல்!!

957

கனடாவில் தனது இரண்டு குழந்தைகள் கத்தியால் குத்தியதாக 36 வயது தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரொரன்ரோவின் Weston Road and Finch Avenue West பகுதியில் தான் இந்த சம்பவம் இரு தினங்களுக்கு முன்னர் நடந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் கத்தி குத்து காயத்துடன் கிடந்த 4 வயது சிறுவன் மற்றும் 6 மாத பெண் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர்களின் காயம் தீவிரமானவை எனவும், அதே சமயம் இருவரின் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகளின் 36 வயது தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர் மீது கொலை முயற்சி, மோசமான தாக்குதலில் ஈடுபட்டது உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

ஆனால் கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை.

ஏனெனில் அவர் குழந்தைகளின் அடையாளத்தை பாதுகாப்பதற்காக அவரது அடையாளம் வெளியிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக யாருக்கேனும் தகவல் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.