கனடாவில் மாயமான 38 வயது பெண் சடலமாக கண்டெடுப்பு! அவருடன் இருந்த ஆண் யார்? வெளியான புகைப்படம்!!

889

கனடாவில் காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் அவர் காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரிட்டீஷ் கொலம்பியாவை சேர்ந்தவர் சாரா பூர்ட் (38). இவர் கடந்த 10ஆம் திகதி Fort St. John பகுதியில் இருந்து காணாமல் போனார்.

சாராவை பொலிசார் தேடி வந்த நிலையில் அவர் காணாமல் போன இடத்திலிருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனிமையான பகுதியில் சடலமாக சமீபத்தில் மீட்கப்பட்டார்.

இந்த நிலையில் சாராவை கொலை செய்ததாக அவரின் காதலன் ஜான் வெண்டில் கெய்லரை பொலிசார் கைது செய்துள்ளனர்.


பொலிசார் கூறுகையில், சாராவும் ஜானும் காதலித்து வந்தனர். இருவரும் ஒன்றாக வெளியில் சென்ற போது சாரா மட்டும் மாயமாகியுள்ளார்.

இதன்பின்னரே அவரை சடலமாக கண்டெடுத்தோம். கைது செய்யப்பட்ட ஜான் செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என கூறியுள்ளனர்.

அவரிடம் முழுமையான விசாரணை நடத்தப்பட்ட பின்னரே இந்த கொலை தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.