சீனாவின் ஷாங்காய் அருகே யாங்சே ஆற்றில் கப்பல் ஒன்றுடன் எண்ணெய் டேங்கர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அதிகாலையில் யாங்சே ஆற்றின் தென்கிழக்கே 2.78 கி.மீ தொலைவில் டேங்கர் கப்பல் ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் கப்பல் மூழ்கிய நிலையில் 3,000 டன் பெட்ரோல் ஏற்றிச்சென்ற எண்ணெய் டேங்கரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தை அடுத்து எண்ணெய் டேங்கரில் இருந்த 14 பேரும், கப்பலில் இருந்த 3 பேர் என மொத்தம் 17 பேர் தண்ணீரில் விழுந்துள்ளனர்.
ஷாங்காய் போக்குவரத்து ஆணையம் விபத்து நடந்த உடனேயே அவசரகால நடவடிக்கையை தொடங்கியது.
பொலிஸ், மீன்வள மற்றும் பிற துறைகளில் இருந்து மீட்பு படகுகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மையம் விரைவாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தது.
8 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாகவும், 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும்,
ஒருவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார் என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், காணாமல் போன 6 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஷங்காய் கடல்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.