கர்ப்பமான கல்லூரி மாணவி: சிக்கிய துணிக்கடையில் வேலை பார்க்கும் வாலிபர்… அம்பலமான அதிர்ச்சி பின்னணி!!

447

தமிழழகன்..

தமிழகத்தில் கல்லூரி மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் காடூரை சேர்ந்தவர் தமிழழகன். இவர், அரியலூரில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை பார்க்கும் போது மல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த மாணவி தற்போது 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்த விவகாரம் மாணவியின் தாய்க்கு தெரியவர மகளிர் காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார்.


அதில் தன்னுடைய மகளை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி தமிழழகன் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் தமிழழகனை கைது செய்துள்ளனர்.

அவரிடம் தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் இது தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.