கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தீபாஞ்சலி நகரை சேர்ந்தவர் சிறுமி நிதி கிருஷ்ணா .14 வயதான இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
மேலும் உடல் ஆரோக்கியத்திற்காக நிதி கிருஷ்ணா தினந்தோறும் கற்றாலை சாறு குடிக்கும் பழக்கத்தை கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தாய் மற்றும் தந்தை வேலைக்கு சென்றிருந்த நிலையில் பாட்டிலில் குளிர்பான பாட்டிலில் வைக்கப்பட்டு இருந்ததை கற்றாலை சாறு என நினைத்து எடுத்து குடித்துள்ளார். இதனால் சிறுமி நிதி கிருஷ்ணாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சிட்டி மார்க்கெட் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிறுமிக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமிநிதி கிருஷ்ணா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பூச்சி கொல்லி மருந்து உட்கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது சிறுமி தினமும் அருந்தி வரும் கற்றாழைச்சாறு பாட்டில் காலியாக இருந்துள்ளது. அதில் செடிகளுக்கு தெளிக்கப்படும் பூச்சி கொல்லி மருந்தை நிறப்பி வைத்தது தெரியவந்தது.இதனை அறியாத சிறுமி நிதி கிருஷ்ணா கற்றாலை சாறு என நினைத்து குடித்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.