கல்லூரி மாணவியைக் கொன்று வீசிய கொடூரம்.. நண்பர்களுடன் சேர்ந்து காதலன் வெறிச்செயல்!!

4

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் துங்கபத்ரா நதியில் கடந்த மார்ச் 6ம் தேதி இளம்பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. முதலில் அடையாளம் தெரியாத மரணம் எனக் கருதப்பட்டது.

இதன் பிறகு பிரேத பரிசோதனையில் அந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீசார் வழக்கை தீவிரமாக விசாரணை நடத்தினர். சில நாட்கள் கழித்து, மரணமடைந்த பெண் 22 வயதான சுவாதி என்ற மாணவி.

அவர் ஹாவேரி மாவட்டத்தின் ரட்டிஹள்ளி தாலுகா மசூருவைச் சேர்ந்த ரமேஷ் ப்யாடாகியின் மகள் எனவும் அடையாளம் காணப்பட்டார். சுவாதி கடந்த மார்ச் 3ம் தேதி தனது வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மார்ச் 7 அன்று ஹிரேகேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விசாரணையின் போது, 28 வயதான நயாஸ் என்பவரை போலீசார் மார்ச் 13 ம் தேதி கைது செய்தனர்.

சுவாதியை ரணிபென்னூர் நகரில் உள்ள சுவர்ணா பூங்காவுக்கு அழைத்துச் சென்ற பின்னர், ரட்டிஹள்ளியில் இருக்கும் ஒரு காலியாக இருந்த பள்ளிக்கூடத்திற்கு கொண்டு சென்று,


புடவையால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். உடலை இரவு 11 மணிக்கு வினாயக்கின் காரில் கொண்டு சென்று துங்கபத்ரா நதியில் எறிந்ததாக தெரிவித்துள்ளார்.

சுவாதியின் தாய் தனது மகளை இழந்ததில் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியிருக்கிறார். “அவள் வெளியில் சென்று வருகிறேன் என்றாள். ஆனால் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

எங்கு தேடியும் காணவில்லை, அதன் பிறகே புகார் செய்தோம். என்னுடைய மகளை யார் கொன்றாலும், நண்பராக இருந்தாலோ வேறு யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.

இதுபோன்று வேறு எந்தப் பெண்ணுக்கும் நடக்கக்கூடாது” எனக் கூறி, போலீசாரை முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். போலீசாரின் விசாரணையில் நயாஸ், வினாயக் மற்றும் துர்கா சாரி பதிகர் என்று மூன்று சந்தேக நபர்கள் தொடர்புடையவர்கள் என தெரிய வந்தது.

அதன் பின்னர் தொடர் விசாரணையில் கடந்த மார்ச் 3ம் தேதியன்று, அவர்கள் சுவாதியை அழைத்துச் சென்று கொலை செய்து, சுவாதியின் உடலை நதியில் வீசி சென்றுள்ளனர்.

நயாஸ் கைதான நிலையில் மற்ற இருவர் தலைமறைவாக உள்ளனர்” என தெரிவித்துள்ளார். மேலும் குற்றம் நிகழ்ந்ததற்கான காரணங்களைப் பற்றிய விரிவான விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

இதில் சுவாதியை நயாஸ் காதலித்து வந்ததும், காளை போட்டிகளை காண்பதில் அதிக ஆர்வம் கொண்ட சுவாதி நயாஸைக் காதலித்து இருவரும் சுற்றி வந்த நிலையில், தனது மதத்தைச் சேர்ந்த பெண்ணை நயாஸ் திருமணம் செய்ய முயன்றதில் சுவாதி சண்டையிட்டுள்ளார்.

இதனால் தனது நண்பர்களுடன் திட்டம் போட்டு, காரில் அழைத்து சென்று கழுத்தை நெரித்து 3 பேரும் சுவாதியை கொலைச் செய்து நதியில் வீசியுள்ளது தெரிய வந்துள்ளது.