கல்லூரி மாணவி பலாத்காரம் செய்து மிரட்டல்.. 21 வயது இளைஞன் கைது!!

19

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நர்சிங் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ காட்சிகளை செல்போனில் பதிவு செய்து, மாணவியின் தந்தைக்கும், சகோதரருக்கும் அனுப்பிய 21 வயது இளைஞரை, புலிகேசு போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் திருவல்லா மாவட்டம், குட்டபுழாவைச் சேர்ந்த மிதுன்(21) என்பவரை இது குறித்த புகாரின் பேரில் கைது செய்த போலீசார் பத்தனம்திட்டா ஜூடிசியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

கல்லூரி மாணவியுடனான நெருக்கமான பழக்கத்தில், மாணவிக்கு தெரியாமல் தனது செல்போனில் அந்தரங்க காட்சிகளை மிதுன் பதிவு செய்துள்ளதாகவும்,

பின்னர் அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக கூறி மாணவியின் தந்தை மற்றும் சகோதரருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார்.

சமூக வலைதளங்களில் மாணவியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், அவதூறாகப் பேசவும் மிதுன் நோக்கம் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மாவட்ட போலீஸ் சைபர் செல் உதவியுடன் விசாரணைக் குழுவினர், மிதுனின் செல்போன் இருந்த இடத்தைக் கண்டுபிடித்து, மாவேலிக்கரை புல்லரிமங்கலத்தில் உள்ள அவரது அத்தையின் வாடகை வீட்டில் இருந்தவரை இரவு 9 மணியளவில் கைது செய்தனர்.


அவரது செல்போனைக் கைப்பற்றி, மாணவியின் அந்தரங்க புகைப்படங்களையும், வீடியோக்களையும் கண்டுபிடித்த போலீசார், செல்போனை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பினர்.

மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் ஐடி சட்டம் மற்றும் கற்பழிப்பு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மாணவியின் வீட்டின் குளியலறையிலும் சில வீடியோக்கள்

பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மிதுன் மாணவியை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.