கல்லூரி விடுதி அறையில் மாணவி தற்கொலை… சிக்கிய உருக்கமான கடிதம்!!

177

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், டெல்லியில் துவாரகாவில் உள்ள சட்டப் பல்கலைக்கழக விடுதி அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அய்யப்பாக்கத்தில் வசித்து வந்தவர் அமிர்தவர்ஷினி. அமிர்தவர்ஷினியை டெல்லியில் துவாரகாவில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் அவரது பெற்றோர் சேர்த்திருந்தனர்.

பல்கலைக் கழகத்திற்கு சொந்தமான விடுதியில் தங்கி இருந்து, கல்லூரி சென்று படித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது அறையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் அறையில் ஒரு கடிதம் இருந்தது. அதை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

தனது தற்கொலைக்கு யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை என கடிதத்தில் எழுதியுள்ள அமிர்தவர்ஷினி, தனது பெற்றோருக்கும் உருக்கமான கடிதம் எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அமிர்தவர்ஷினி பதற்றமாக இருந்ததாக சக மாணவர்கள் தெரிவித்தனர். அம்ரிதா வர்ஷினியின் பெற்றோர் மகளை ஏப்ரல் மாதம் வீட்டிற்கு அழைத்து வந்து ஒரு வாரம் கழித்து டெல்லிக்கு அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.